ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் புதிய தலைவர் - பராக் ஜெயின்
July 2 , 2025 12 hrs 0 min 32 0
பராக் ஜெயின் இந்தியாவின் வெளிவிவகாரப் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1968 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவானது, பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
இதற்கு நேர்மாறாக, 1887 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உள் விவகாரப் புலனாய்வு அமைப்பான புலனாய்வு வாரியம் (IB) ஆனது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல் படுகிறது.
IB பிரிவானது உலகின் பழமையான புலனாய்வு அமைப்பாகக் கருதப்படுகிறது.