TNPSC Thervupettagam

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களில் இந்தியாவின் முன்னேற்றம்

November 12 , 2025 15 hrs 0 min 12 0
  • இந்திய அரசானது, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க (RDI) திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
  • 2010–11 ஆம் ஆண்டில் 60,196 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினம் ஆனது 2020–21 ஆம் ஆண்டில் 1.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களில் மத்திய அரசு சுமார் 43.7 சதவீதப் பங்களிப்பை வழங்குகிற அதே நேரத்தில் தனியார் துறை 36 சதவீதப் பங்களிப்பை வழங்குகிறது.
  • 2020–21 ஆம் ஆண்டில் 24,326 ஆக இருந்த காப்புரிமைத் தாக்கல்கள் 2024–25 ஆம் ஆண்டில் சுமார் 68,176 ஆக அதிகரித்துள்ளன என்பதோடு இது உள்நாட்டுக் கண்டுபிடிப்புகளில் ஏற்பட்ட அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்