ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வுக்கான சர்வதேச சிறு தானிய முன்னெடுப்பு
February 27 , 2023 911 days 388 0
சிறு தானியங்களின் நுகர்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஓர் உலகளாவிய முன்னெடுப்பினைத் தொடங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள சிறு தானிய ஆராய்ச்சி நிறுவனங்களை இணைப்பதோடு, சிறு தானியப் பயிர்கள் பற்றிய ஆராய்ச்சியையும் ஆதரிப்பதனையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா “விதை நிதியம்” என்பதற்குப் பங்களிக்க உள்ள அதே சமயம் G20 அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினர் நாடுகளும் அதன் நிதிநிலையில் தனது உறுப்பினர் கட்டணமாக ஒரு தொகையினைப் பங்களிக்க வேண்டும்.
ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய சிறு தானிய ஆராய்ச்சி நிறுவனம் ஆனது இந்த முன்னெடுப்பிற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்.
இந்தியாவின் வலியுறுத்தலின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையானது 2023 ஆம் ஆண்டினைச் சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவித்தது.