சட்டவிரோத ஆரிய சமாஜ் திருமணங்கள் குறித்து விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
ஆரிய சமாஜ் அமைப்பானது, 1875 ஆம் ஆண்டில் சுவாமி தயானந்த சரஸ்வதியால் ஓர் இந்து மீட்பு இயக்கமாக அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
"சுத்தி" (சுத்திகரிப்பு) என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறை மூலம், பிற சமயங்கள் அல்லது சித்தாந்தங்களைப் பின்பற்றும் மக்களை அதன் வேதகால, ஓரிறைக் கொள்கை சார்ந்த இந்து மதத்திற்கு மாற்ற என ஆரிய சமாஜம் முயற்சிகளை மேற் கொண்டது.
விரைவான திருமணங்களை விரும்பும் தம்பதிகள், குறிப்பாக வெவ்வேறு சாதிகள் அல்லது சமயங்களைச் சேர்ந்தவர்கள், ஆரிய சமாஜத் திருமணங்களை விரும்புகிறார்கள்.
1937 ஆம் ஆண்டில், "சந்தேகங்களை நீக்கவும்" ஆரிய சமாஜத் திருமணங்களின் செல்லுபடித் தன்மையினை அங்கீகரிக்கவும் ஆரிய திருமணச் சரிபார்ப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
இந்தத் திருமணங்கள் குறிப்பிட்ட இந்து சடங்குகளின்படி நடைபெறுகின்றன, ஆனால் மணமகனும், மணமகளும் திருமண வயதை எட்டியிருக்க வேண்டும் மற்றும் அவர்களின் சாதி அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் தங்களை ஆரிய சமாஜிகள் என்று அறிவிக்க வேண்டும்.
இந்த செயல்முறையானது 30 நாட்கள் அளவிலான பொது அறிவிப்பு மற்றும் முறையான நடைமுறைகளை வலியுறுத்துகின்ற 1954 ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தை விட விரைவானது மற்றும் எளிமையானது.
உத்தரப் பிரதேசத்தில், 2021 ஆம் ஆண்டு சட்டவிரோத மத மாற்றத் தடைச் சட்டத்தின் 6வது பிரிவு, சட்டவிரோதமான அல்லது நடைமுறை ரீதியாக இணங்காத மத மாற்றத்திற்கு முந்தைய எந்தவொரு திருமணத்தையும் செல்லாது என்று அறிவிக்கிறது.
இதற்கு, மத மாற்றத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய அறிவிப்புகள் அவசியம் ஆகும், மேலும் இது தன்னார்வ சம்மதத்தைக் காட்டுவதற்கான ஒரு ஆதாரத்தினை முன் வைப்பதற்கான கடமையை குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்துகின்றன.
ஆரிய சமாஜத்தின் சுத்தி சடங்குகள் பெரும்பாலும் இந்த சட்டத் தர நிலைகளை பூர்த்தி செய்யாது என்பதால் இது ஆரிய சமாஜ் திருமணங்களுக்கும், மாநிலச் சட்டங்களுக்கும் இடையில் மோதல்களை உருவாக்குகிறது.