TNPSC Thervupettagam

ஆரோக்கியமான இந்தியா (Fit India) - இயக்கம்

August 29 , 2019 2168 days 637 0
  • பிரதமர் நரேந்திர மோடி தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 29) நாடு தழுவிய “ஆரோக்கியமான இந்தியா” (Fit India) என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தப் பிரச்சாரமானது மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் உடற் பயிற்சி மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றை மேற்கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரச்சாரம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவின் தலைமையில் 28 நபர்களைக்  கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த போது, இத்தினமானது ஹாக்கி வீரரான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாள் என்பதால் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்