இந்தத் திட்டத்தின் கீழ், இயற்கைப் பேரழிவுகள் அல்லது மனிதாபிமானம் சார்ந்த நெருக்கடி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு வளர்ந்து வரும் நாட்டிற்கும் இந்தியா அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்க உள்ளது.
மேலும், இந்தியா ‘உலகத் தெற்கு நாடுகளுக்கானச் சிறப்பு மையத்தினையும்’ நிறுவ உள்ளது.
எந்தவொரு வளர்ந்து வரும் நாட்டின் மேம்பாடு சார்ந்தத் தீர்வுகள் அல்லது சிறந்த நடைமுறைகள் குறித்த ஒரு ஆராய்ச்சியை இது மேற்கொள்ள உள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வியைத் தொடர்வதற்காக ‘உலகத் தெற்கு நாடுகளுக்கான உதவித் தொகை அடிப்படையிலான கல்வித் திட்டத்தினையும்’ இந்தியா அமைக்க உள்ளது.