நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மருத்துவ குணமுடைய மரங்களை நடுவதற்காக 'ஆரோக்ய வன்' என்ற முன்னெடுப்பை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது.
பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் மீள்திறனை மேம்படுத்தும் வகையில், மருத்துவ தாவரங்களைக் கொண்ட பசுமை வழித்தடங்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் முதல் கட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் உள்ள 17 நிலப்பரப்புகளில் (62.8 ஹெக்டேர்) சுமார் 67,000 மரங்கள் நடப்பட உள்ளன.
வேளாண்-பருவநிலை தகுதியின் அடிப்படையில் வேம்பு, நெல்லி, நாவல் போன்ற சுமார் 36 வகையான மரக்கன்றுகள் நடப்படும்.