ஆர்க்டிக்கில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர்பக்
February 1 , 2019 2350 days 819 0
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ஆன்டிபயாடிக் எதிர்ப்பைக் கொண்ட சூப்பர்பக் மரபணுவானது உலகின் கடைசியான அச்சுஅசலான இயற்கையைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றான ஆர்க்டிக்கில் கண்டறியப்பட்டிருக்கின்றது.
இக்கண்டுபிடிப்பு உலகளாவிய ஆன்டிபயாடிக் எதிர்ப்பின் பரவுதலுக்கான மிகப்பெரிய விளைவுகளைக் கொண்டிருக்கின்றது.
ஸ்வால்போர்டு பகுதியில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகள் blaNDM-1 (New Delhi Metallo-beta-lactamase-1) என்று அறியப்படும் புது தில்லி மெத்தலோ பீடா லாக்டமாஸ் 1 என்ற மரபணுவின் பரவுதலை ஆர்க்டிக் பிராந்தியத்தின் உயர்பகுதியில் தற்போது உறுதிப்படுத்தியிருக்கின்றன.
ஸ்வால்போர்டு என்பது வடதுருவத்திற்கும் நார்வேயின் மையநிலப்பகுதிக்கும் நடுவேயுள்ள நார்வே நாட்டைச் சார்ந்த ஒரு தீவுக்கூட்டமாகும்.
இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்பு மரபணுவானது நுண்ணுயிரிகளில் பல மருந்து எதிர்வினையை ஏற்படுத்துகின்றது.
பலவகைப்பட்ட பாக்டீரியாக்களில் எதிர்ப்புத் தன்மையை அளிக்கும் புரதமான NDM-1 என்பது இதற்கு உதாரணமாகும்.