ஆர்க்டிக் அடிவானத்திற்கு அப்பால் பார்க்கக் கூடிய ரேடார் அமைப்பு
June 28 , 2026 129 days 243 0
ஆர்க்டிக் அடிவானத்திற்கு அப்பால் பார்க்கக் கூடிய ரேடார் அமைப்பு (A-OTHR) எனும் அமைப்பைக் கொள்முதல் செய்வதற்காக ஆஸ்திரேலியா மற்றும் BAE சிஸ்டம்ஸ் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்திட்டது.
A-OTHR அமைப்பானது, சாதாரண ரேடார் வரம்பிற்கு அப்பால் உள்ள விமானங்கள் மற்றும் எறிகணைகளைக் கண்டறிய, அயனிமண்டலத்திலிருந்து பிரதிபலிக்கும் உயர் அதிர்வெண் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பானது ஆஸ்திரேலியாவின் ஜிண்டாலீ செயல்பாட்டு ரேடார் வலையமைப்பு (JORN) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதுடன் மேலும் இது கனடாவின் வட அமெரிக்க விண்வெளிப் பாதுகாப்புத் தலைமையக (NORAD) நவீனமயமாக்கல் திட்டத்தை ஆதரிக்கிறது.
நோராட் (NORAD - வட அமெரிக்க விண்வெளிப் பாதுகாப்புத் தலைமையகம்) என்பது கனடா மற்றும் அமெரிக்காவின் கூட்டுப் பாதுகாப்பு அமைப்பாகும்.
இத்திட்டம் 2029 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தனது ஆரம்பகட்ட செயல்பாட்டுத் திறனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதோடு மேலும் இது 2026-2033 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கனடாவில் ஆண்டுதோறும் சுமார் 2,270 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.