‘இந்தியா மற்றும் ஆர்க்டிக்: நிலையான மேம்பாட்டிற்கான கூட்டுறவினை கட்டமைத்தல்’ என்று தலைப்பிடப்பட்ட ஆர்க்டிக் கொள்கையினை மத்திய அரசு வெளியிட்டது.
இது ஆர்க்டிக் பகுதியுடன் அறிவியல் மற்றும் ஆய்வு, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கனிம வளத்தின் பயன்பாடு மற்றும் கடல்சார் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் தேசிய செயல்திறன் மற்றும் போட்டித்திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆர்க்டிக் சபையில் இந்தியாவின் பங்கேற்பினை அதிகரித்தல் மற்றும் அப்பகுதியின் சிக்கலான ஆளுகை அமைப்புகளின் புரிதலை மேம்படுத்துவதில் இக்கொள்கை ஈடுபாடு செலுத்தும்.
ஆர்க்டிக் சபையில் பார்வையாளர் நாடுகளாக உள்ள 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.