ஆர்க்டிக் நோக்கிய இந்தியாவின் முதல் குளிர்கால ஆய்வுப் பயணம்
December 22 , 2023 512 days 277 0
நார்வேயின் ஸ்வால்பார்டில் உள்ள நை-அலெசுண்ட் ஆராய்ச்சி தளத்திற்கு இந்தியா தனது முதல் குளிர்கால ஆய்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
தேசிய துருவ மற்றும் கடல் சார் ஆராய்ச்சி மையம் (NCPOR) ஆனது ஹிமாத்ரி என்ற இடத்தில் ஆராய்ச்சி நிலையத்தைக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வுப் பயணம் ஆனது வளிமண்டலச் செயல்முறைகள், வட துருவ மின்னொளி, வளிமண்டல மின்சாரத் தன்மை மற்றும் விண்வெளி சார் இயற்பியல் ஆய்வுகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும்.
ஆர்க்டிக் கடல் பனியானது பத்தாண்டுகளுக்கு 13% என்ற வீதத்தில் குறைந்து வருகிறது.
இந்தியப் பருவமழை மற்றும் வெப்பமண்டலப் பருவநிலையில் அதன் தாக்கத்தைப் பற்றி புரிந்து கொள்ள இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வது முக்கியமானதாகும்.
NCPOR ஆர்க்டிக் பகுதியில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், கனடாவின் உயர் ஆர்க்டிக் ரேகை பகுதி மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் முக்கிய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில், ஜப்பானின் தேசிய துருவ ஆராய்ச்சி நிறுவனம் ஆனது, னை நை -அலெசுண்ட் பகுதியில் ஆராய்ச்சி நிலையத்தினை நிறுவிய முதல் நிறுவனம் ஆகும்.