ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் உறுப்பினர் அந்தஸ்து
May 12 , 2022 1195 days 528 0
பென்லோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குருசுவாமி கிருஷ்ண மூர்த்தி, மிகவும் மதிப்புமிக்க 2022 ஆம் ஆண்டு ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (குடிமைப் பிரிவு) விருதை (ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் கௌரவ உறுப்பினர் அந்தஸ்து) பெற உள்ளார்.
குருசுவாமி கிருஷ்ணமூர்த்தி இந்தியாவின் தமிழக மாநிலத்திலுள்ள மதுரையைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்தப் பிரிட்டிஷ் கெளரவ விருதுகளானது, முதலில் புத்தாண்டிலும், ராணியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் மாதமான ஜூன் மாதத்திலும் என ஆண்டிற்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது.
குருசுவாமி, பென்லோன் நிறுவனத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குழுமத்தில் அடங்கிய நிறுவனக் குழுமங்களுக்குத் தலைமை வகிக்கிறார்.
இந்த நிறுவனம் மூலம் 12 வாரங்களில் 11,700 செயற்கை சுவாசக் கருவிகள் ஐக்கியப் பேரரசுக்கு வழங்கப்பட்டன.