TNPSC Thervupettagam

ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் - துருக்கி

September 4 , 2026 11 days 58 0
  • பாதுகாப்பான மற்றும் அமைதியான விண்வெளி ஆய்வுக்கான கட்டமைப்பான ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் இணைந்த 71வது நாடாக துருக்கி உருவெடுத்துள்ளது.
  • ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டில் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆகியவற்றால் தொடங்கப் பட்டது.
  • இந்த ஒப்பந்தம் 1967 ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலவு, செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் அமைதியான ஆய்வை ஊக்குவிக்கிறது.
  • இதில் கையெழுத்திட்டவர்கள் அறிவியல் தரவுகளைப் பகிரவும், அவசர காலங்களில் விண்வெளி வீரர்களுக்கு உதவவும், விண்வெளி அமைப்புகளின் இயங்குதன்மையை மேம்படுத்தவும் உறுதியளிக்கின்றனர்.
  • ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தத்தில் இணையும் ஏழாவது மேற்கு ஆசிய நாடு துருக்கி ஆகும்.
  • துருக்கி தனது முதல் ஆளில்லா சந்திரப் பயணமான AYAP-1 ஐ உருவாக்கி வருகிறது, மேலும் விண்வெளி ஆய்வில் தனது திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்