ஆர்ட்டெமிஸ் III திட்டத்திற்கான நான்கு பேர் கொண்ட குழுவை நாசா அறிவித்துள்ளது.
ஆர்ட்டெமிஸ் III என்பது ஆழ் விண்வெளி மற்றும் சந்திரனை ஆராய்வதற்கான நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டம் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நான்கு பேர் கொண்ட குழுவில் ராண்டி ப்ரெஸ்னிக் (அமெரிக்கா), லூகா பர்மிடானோ (இத்தாலி), ஆண்ட்ரே டக்ளஸ் (அமெரிக்கா) மற்றும் ஃபிராங்க் ரூபியோ (அமெரிக்கா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்கால சந்திரப் பயணங்களுக்கு முன்னதாக இத்திட்டம் சந்திப்பு மற்றும் இணைதல் செயல்பாடுகளைச் சோதிக்கும்.
திருத்தப்பட்ட ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் முதல் மனிதனை நிலவில் தரையிறக்கும் பணி தற்போது 2028 ஆம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ் IV திட்டத்திற்காக இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.