ஆர்யபட்டா செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவு
April 24 , 2025 239 days 291 0
1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதியன்று, இந்தியாவானது தனது முதல் செயற்கைக் கோளான ஆர்யபட்டாவை விண்ணில் ஏவியது.
இஸ்ரோ நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஆர்யபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் ஒன்றியத்தில் இருந்து சோவியத் காஸ்மோஸ்-3M ஏவுகலத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
ஊடு கதிர்வீச்சு சார் வானியல், சூரிய இயற்பியல் மற்றும் வளிமண்டலவியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
ஆனால் தனது சுற்றுப்பாதையில் நுழைந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆர்யபட்டா செயற்கைக் கோளில் மின்னிணைப்பு செயலிழந்தது.
அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அதன் அறிவியல் சார் ஆய்வு நோக்கங்கள் நிறைவு செய்யப்படவில்லை.