ஆறாவது ஆசிய டென்ட்ரோக்ரோனாலஜி (மரத்தின் வளையங்கள் ஆராய்ச்சி) மாநாடு
November 30 , 2019 2222 days 928 0
ஆறாவது ஆசிய டென்ட்ரோக்ரோனாலஜி மாநாடானது லக்னோவில் நடைபெற்றது.
இந்தியாவில் இந்த மாநாடு நடத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
மர வளையங்களை ஆய்வு செய்வது டென்ட்ரோக்ரோனாலஜி எனப்படும்.
மரத்தின் வளையங்களானவை அந்த மரத்தின் கடந்த காலத்தைப் பற்றி மட்டும் அல்லாமல், அது வாழும் சுற்றுச்சூழல் அமைப்பைப் பற்றியும் மற்ற பிற ஏராளமான தகவல்களையும் கொண்டுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் "வெவ்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளிலிருந்துப் பெறப்படும் தாவரங்களின் மீதான கடந்தகாலப் புனரமைப்பின் மூலம் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கணிக்க முடியும்" என்று கூறியுள்ளனர்.