ஆறாவது முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் – உத்தரகாண்ட்
October 9 , 2026 2 days 71 0
ULLAS திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் 6வது முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உத்தரகாண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 95% செயல்பாட்டு எழுத்தறிவை அடைந்த பிறகு ஒரு மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசம் முழுமையான எழுத்தறிவு பெற்றதாகக் கருதப்படுகிறது, அதே சமயம் உத்தரகாண்ட் 98.70% வயது வந்தோர் எழுத்தறிவு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
தேசிய எழுத்தறிவு அளவுகோலைக் கடந்த மாநிலங்களான சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா மற்றும் திரிபுரா ஆகியவற்றுடன் தற்போது உத்தரகாண்டும் இணைந்துள்ளது.
கணக்கெடுப்புகள், கற்போர் பதிவு மற்றும் வயது வந்தோர் எழுத்தறிவு நடவடிக்கைகள் மூலம் சுமார் 25,000 தன்னார்வலர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
ULLAS திட்டமானது அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, டிஜிட்டல் எழுத்தறிவு, நிதி எழுத்தறிவு, குடிமை விழிப்புணர்வு மற்றும் வாழ்நாள் கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.