ஆறு புதிய தளங்கள் ஆனது சமீபத்தில் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் பாரம்பரிய அமைப்புகள் (GIAHS) என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள எர்வா-மேட் தாவரத்திற்கான ஒரு பாரம்பரிய வேளாண் வனவியல் அமைப்பு.
சீனாவில் முத்துச் சிப்பி (ஒரு மெல்லுடலி), வெள்ளை தேயிலை மற்றும் பேரிக்காய் போன்றவற்றிற்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு வேளாண் செயல்முறைகள்,
மெக்சிகோவில் முக்கிய உணவுப் பயிர்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முந்தைய கால அமைப்பு மற்றும்
ஸ்பெயின் நாட்டின் லான்சரோட் தீவின் எரிமலை நிலப்பரப்பில் மேற்கொள்ளப் படும் ஒரு தனித்துவமான வேளாண் முறை
இது குடும்ப முறை வேளாண்மை மற்றும் பாரம்பரிய வேளாண் முறைகளை பருவ நிலை மாற்றம், சமூக இடப்பெயர்வுகள் மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற முக்கிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 3 தளங்களுடன், சுமார் 28 நாடுகளில் மொத்தம் 95 GIAHS தளங்கள் உள்ளன.
இந்தியாவில் உள்ள GIAHS தளங்கள்:
காஷ்மீரின் குங்குமப்பூ வளர்ப்பு நகரம்
கோராபுட் பாரம்பரிய வேளாண்மை - ஒடிசா
கடல் மட்டத்திற்கு கீழே மேற்கொள்ளப்படும் வேளாண் முறை - கேரளா.