TNPSC Thervupettagam

ஆற்றல் மாற்ற ஆலோசனைக் குழு

January 5 , 2022 1236 days 1036 0
  • ஆற்றல் மாற்ற ஆலோசனைக் குழுவானது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டது.
  • பெட்ரோலிய அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் தருண் கபூர் இதற்குத் தலைமை தாங்குகிறார்.
  • இக்குழுவானது நாட்டின் ஆற்றல் கலப்பு முறையில்  ஹைட்ரஜன் உயிரி எரிபொருள், அணுசக்தி, புவி வெப்ப ஆற்றல், ஓத ஆற்றல் உள்ளிட்ட தூய ஆற்றல் மூலங்களின் பங்கினை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும்.
  • இது பின்வரும் பணிகளுக்காக உருவாக்கப்பட்டது.
    • 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு என்ற இந்தியாவின் இலக்கை அடைய உதவுதல்.
    • ஆற்றல் மாற்ற செயல்திட்டத்தினை (6 மாதங்களுக்குள்) உருவாக்குவதல்.
    • புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய ஆற்றல் முறைகளுக்கு நகர்தலுக்கான ஒரு படிப்படியான திட்டத்தை உருவாக்குதல்.
    • இந்தக் குழுவானது, அனைத்துத் தூய ஆற்றல்களிலும் முதன்மையாக உயிரி எரிபொருள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவை குறித்து அதிக ஈடுபாடு செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்