ஆலங்குடி மருத்துவமனை - NQAS மற்றும் காயகல்ப் சான்றிதழ்
July 20 , 2025 7 days 60 0
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான தேசியத் தர உறுதி தரநிலைகள் (NQAS) மற்றும் காயகல்ப் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் 2013 ஆம் ஆண்டில் NQAS நிறுவப் பட்டது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தரமான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிப்புற சுகாதாரப் பராமரிப்புத் தரத்திற்கானச் சங்கத்தில் தரநிலைகளுக்கானத் தேசியச் சங்கத்தினால் தரநிலைகள் சரிபார்க்கப்படுகின்றன.
காயகல்ப் என்பது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு தேசிய முன்னெடுப்பாகும்.
இது பொது சுகாதார வசதிகளில் தூய்மை, சுகாதாரம் மற்றும் நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முறையே மருத்துவ மற்றும் கிராமப்புறச் சுகாதாரச் சேவைகள் இயக்குநரகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் முதன்மை நிலை பராமரிப்பு மையங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.