ஆலப்புழா - முழுவதும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட வங்கி முறையைக் கையாளும் 5வது மாவட்டம்
September 2 , 2022 1179 days 581 0
கேரள மாநிலத்தில் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வங்கி முறையைக் கையாளும் 5வது மாவட்டமாக ஆலப்புழா மாறியுள்ளது.
இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள 29 வங்கிகளில் 26 லட்சம் சேமிப்பு/நடப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியில் பணம் பெறும் அட்டை - கடன் அட்டை, இணைய வழி வங்கி முறை, கைபேசி வழியான வங்கி வசதி, ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் மற்றும் பல உள்ளன.
இது தொடர்பான ஒரு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
திருச்சூர், கோட்டயம், பாலக்காடு மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் வங்கிச் சேவைகள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளன.