கேரளாவில் திருச்சூரில் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சடபில்லி கோயில் அதன் ஆலயச் சடங்குகளைச் செய்வதற்காக (மோட்டார்) இயக்கி பொருத்தப்பட்ட ஒரு யானையின் உருவத்தினை ஒத்த அளவிலான ஒரு மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்தியாவில் இந்த மாதிரியிலான முதல் முயற்சி ஆகும்.
பீட்டா இந்தியா அமைப்பானது இதனை அக்கோவிலுக்குப் பரிசாக வழங்கியது.
யானையின் உருவத்தினை ஒத்த அளவிலான இயந்திர யானைக்கு இரிஞ்சடபில்லி ராமன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் 4 பேர் பயணம் செய்ய முடியும்.
இந்த யானையின் தலை, கண், வாய், காது, வால் ஆகிய அனைத்தும் மின்சாரம் மூலமாக இயங்குகின்றது.