TNPSC Thervupettagam

ஆல்பைன் மலர் - சயானந்தஸ் ஹூக்கேரி

July 18 , 2026 10 days 91 0
  • 'சயானந்தஸ் ஹூக்கேரி' என்ற அரிய வகை ஆல்பைன் மலர் அருணாச்சலப் பிரதேசத்தில் 158 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது தவாங் மாவட்டத்தில் உள்ள மாகோ கிராமத்திற்கு அருகிலுள்ள சுனா பள்ளத் தாக்கில் சுமார் 3,600 மீட்டர் உயரத்தில் கண்டறியப்பட்டது.
  • இத்தாவரம் காம்பானுலேசி (மணி வடிவ மலர்) குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இது அதிக உயரமுள்ள இமயமலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
  • 1867 ஆம் ஆண்டில் சிக்கிமில் பிரிட்டிஷ் தாவரவியலாளர் சர் ஜோசப் டால்டன் ஹூக்கர் என்பவரால் இந்த இனம் இந்தியாவில் முதல்முறையாக அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
  • காடுகளில் இதன் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதால், இதனை 'அருகிவரும் இனம்' என வகைப்படுத்த இந்தியத் தாவரவியல் ஆய்வு மையம் (BSI) பரிந்துரைத்து உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்