2019 ஆம் ஆண்டின் ஆளில்லா விமானக் கண்டுபிடிப்பாளர்கள் அமைப்பின் உச்சி மாநாடு புது தில்லியில் நடத்தப் பட்டது.
இது உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உலகப் பொருளாதார மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆளில்லா விமானத்தின் விதிமுறைகளை ஏற்படுத்தி அதனைப் பின்பற்றி வரும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமானது ஆளில்லா விமானங்களுக்காக பொது சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் அமல்படுத்தியது.
ஆளில்லா விமானத்தின் உற்பத்தியாளர்கள் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் விமான அமைப்பின் “அனுமதி இல்லாமல் புறப்படக் கூடாது” போன்ற விதிகளைப் பின்பற்றுமாறு ஆளில்லா விமானங்களை உருவாக்க வேண்டும்.
பொது சிவில் விமானப் போக்குவரத்துத் தேவை விதிமுறைகள் ஆனவை ஆளில்லா விமானத்தின் செயல்பாடுகளைப் பகல்நேர கண்ணுறு ஒளியில் மட்டுமே அனுமதிக்கின்றன.
டிஜிஸ்கை என்பது இந்தியாவில் சிவில் ரக ஆளில்லா விமானங்களைப் பதிவு செய்வதற்கும் அவை பறப்பதற்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு வலைதளம் ஆகும்.