ஆளில்லா விமானங்கள் மற்றும் பறக்கும் கார்களுக்கான முதல் விமான நிலையம்
May 25 , 2022 1085 days 388 0
மின்சாரத்தில் இயங்கும் ஆளில்லா விமானங்கள்மற்றும் பறக்கும் கார்களுக்கான உலகின் முதல் விமான நிலையம் ஐக்கியப் பேரரசில் உள்ள ஒரு நகரத்தின் மையப் பகுதியில்திறக்கப்பட்டுள்ளது.
பாப்-அப் ஏர்-ஒன் என்ற இந்த விமான நிலையமானது கோவென்ட்ரி நகரில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இது பூஜ்ஜிய உமிழ்வு அம்சத்தினைக் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் ஆளில்லா விமானங்கள்மற்றும் வாடகை விமானச்சேவைகள் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
மேலும், இந்த விமான நிலையமே ஹைட்ரஜன் எரிபொருள் கலன்கள்மூலம் இயக்கப் படுகிறது.
நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதில்நகர்ப்புற வான்வழிப் போக்குவரத்துத் திறனைப்பறைசாற்றுவதை நோக்கமாகக் கொண்டுஇந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.