இராணுவ ஆளில்லா விமானங்களில் உள்ள மென்பொருள் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு பாதிப்புகளைக் கண்டறிவதற்காக, புது தில்லியில் உள்ள DG EME தலைமையகத்தில் இந்திய ராணுவம் AASHVAST ஆய்வகத்தை அமைத்துள்ளது.
AASHVAST என்பது மின்னணு அமைப்புகளின் வன்பொருளில் உள்ள பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு என்பதன் சுருக்கமாகும்.
இது ஆளில்லா விமான மென்பொருட்களில் உள்ள மறைமுக வழிகள், அங்கீகரிக்கப் படாத கூறுகள் மற்றும் மறைக்கப்பட்ட அணுகல் கருவிகளைச் சரிபார்க்கும் இணையத் தொடர்பற்ற ஆய்வகமாகும்.
மின்னணுப் போர் நுட்பங்களான GPS போலி அடையாளத்தை பயன்படுத்துதல் மற்றும் நெரிசல் ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஆளில்லா விமானங்கள் காட்டும் எதிர் வினைகளை இதனால் சோதிக்க முடியும்.