TNPSC Thervupettagam

ஆளுகைத் திறனில் முன்னணியிலுள்ள மாநிலங்கள்

October 31 , 2021 1390 days 575 0
  • பொது விவகாரங்கள் மையத்தினால் வெளியிடப்பட்ட ஆளுகைச் செயல்திறன் மீதான சமீபத்திய ஒரு அறிக்கையில் கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகியவை முன்னணி மாநிலங்களாக உள்ளன.
  • 2020 ஆம் ஆண்டிற்கான தரவரிசையுடன் ஒப்பிடுகையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பின்னுக்குத் தள்ளி தெலுங்கானா மாநிலம் 3வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • ஜார்க்கண்ட மாநிலமானது  இந்த ஆண்டு 15வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இடம் பெற்ற சிறு மாநிலங்களில் சிக்கிம், கோவா மற்றும் மிசோரம் ஆகியவை முன்னணியாளர்களாக உருவெடுத்துள்ளன.
  • ஒன்றியப் பிரதேசங்களில் புதுச்சேரி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் சண்டிகர் ஆகியவை முன்னணியாளர்களாக உருவெடுத்துள்ளன.
  • பொது விவகாரங்கள் மையமானது பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு இலாப நோக்கமற்ற ஆலோசனை சேவை வழங்கும் அமைப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்