TNPSC Thervupettagam

ஆளுகையில் புவியியல் அமைப்புகள்

May 5 , 2026 15 hrs 0 min 58 0
  • நிலையான மேம்பாட்டிற்கான புவியியல் அமைப்புகளை மேம்படுத்துவது குறித்த ஆசிய-பசிபிக் மன்றத்தை இந்தியா தொகுத்து வழங்கியது.
  • புவியியல் அமைப்புகள் GIS (புவியியல் தகவல் அமைப்பு), GPS (உலகளாவிய நிலைப் படுத்தல் அமைப்பு), தொலை உணர்வு, ஆளில்லா விமானங்கள் மற்றும் ஒளி கண்டறிதல் மற்றும் வரம்பு நிர்ணயம் (LiDAR) போன்ற கருவிகளைப் பயன்படுத்துகின்றன.
  • ஐக்கிய நாடுகளின் உலகளாவியப் புவியியல் தகவல் மேலாண்மைக்கான நிபுணர் குழு (UN-GGIM) என்பது ஐ.நா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் கீழ் புவியியல் கொள்கைகளை உருவாக்குவதற்கான உலகளாவிய அமைப்பாகும்.
  • இந்த அமைப்புகள் நகர்ப்புறத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் மேலாண்மை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உதவுகின்றன.
  • தேசியப் புவியியல் கொள்கை 2022 மற்றும் தேசியப் புவியியல் திட்டம் (2025-26) ஆகியவை அரசாங்கத்தின் முன்னெடுப்புகளில் அடங்கும்.
  • eLoc என்பது இந்தியாவின் ஒவ்வொரு இடத்திற்கும் தனித்துவமான ஆறு எழுத்துக்கள் கொண்ட டிஜிட்டல் முகவரியை வழங்கும் ஒரு தேசிய டிஜிட்டல் முகவரி அமைப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்