மரண தண்டனைக்குட்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து வகை கைதிகளையும் ஒரு மாநில ஆளுநர் மன்னிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு சிறைக் கைதி குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்வதற்கு முன்பாகவே ஆளுநர் அந்தக் கைதிக்கு மன்னிப்பு வழங்க இயலும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 433A என்ற பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை ஆளுநரின் மன்னிப்பு அதிகாரம் மீறுவதாக உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.
433A பிரிவானது ஒரு கைதி 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்த பின்னர் மட்டுமே அதைக் குறைக்க முடியும் என்று கூறுகிறது.
உண்மையில் 161வது சட்டப் பிரிவின் கீழான ஆளுநரின் மன்னிப்பு அதிகாரமானது மாநில அரசால் செயல்படுத்தப் படுகிறதே தவிர ஆளுநரின் சொந்த விருப்பால் அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
குறிப்பு
இந்திய அரசியலமைப்பின் 161வது சட்டப் பிரிவானது சட்டத்திற்குப் புறம்பாக குற்றம் புரிந்த எந்தவொரு நபருக்கும் மன்னிப்பு வழங்குவதற்கும், அவரைத் தண்டனையிலிருந்து விடுவிக்கச் செய்வதற்கும், அவருக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கும் (அ) இடைநீக்கம் செய்வதற்கும், தள்ளுபடி செய்வதற்கும் ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரத்தை அளிக்கிறது.
இப்போது வரை, மரண தண்டனை உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் கைதிகளை மன்னிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.
இருப்பினும் ஆளுநருக்கான இந்த விதிமுறையானது சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் மாற்றியமைக்கப் பட்டது.