இந்தியப் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் ஆழ்கடல் சுரங்க அமைப்பிற்கான உலகின் முதல் எந்திரச் சோதனைகளை நடத்திய இந்திய அறிவியலாளர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தேசிய அறிவியல் விருதை வழங்கினார்.
மேலும், முதல் வகையான மற்றும் அதிநவீன ரீதியில் முழுவதும் தன்னிச்சையாக இயங்கும் மிதவை அடிப்படையிலான கடலோரக் கண்காணிப்பு மற்றும் இந்தியப் பெருங் கடலுக்கான நீரின் தர அறிவிப்பு அமைப்பினையும் அவர் திறந்து வைத்தார்.
இது இந்தியத் தேசியக் கடல் தகவல் சேவை மையத்தினால் உருவாக்கப்பட்டது.
மேலும், இது இந்தியாவின் ஆழ்கடல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கடலில் 200 மீட்டர் ஆழத்திற்கு கீழே உள்ள பகுதி ஆழ்கடல் என்று வரையறுக்கப் படுகிறது.
இந்தப் பகுதியில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் செயல்முறை ஆழ்கடல் அகழ்வு என்று அழைக்கப்படுகிறது.