எத்தியோப்பியாவின் அஃபார் பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவமாகிய பற்கள், சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மனித மூதாதையர் இனங்கள் இணைந்து வாழ்ந்ததை வெளிப்படுத்துகின்றன.
இந்தக் கண்டுபிடிப்பில் முன்னர் அறியப்படாத ஆஸ்ட்ராலோபிதேகஸ் (தெற்கத்திய மனிதன்) இனத்தின் 10 பற்களும், ஆரம்பகால ஹோமோ இன நபர்களின் 3 பற்களும் அடங்கும்.
ஹோமோ இனம் தோன்றுவதற்கு முன்பு ஆஸ்ட்ராலோபிதேகஸ் இனங்கள் மறைந்து விட்டன என்ற பழைய கருத்திற்கு இது சவால் விடுக்கிறது.
இந்த காலக் கட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் குறைந்தது ஐந்து ஹோமினின் இனங்கள் ஒன்றாக வாழ்ந்ததாக இந்தக் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.