ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்
May 25 , 2022
1085 days
402
- ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பனீஸ் பதவியேற்றுள்ளார்.
- அந்நாட்டின் 31வது பிரதமராக இவர் பதவியேற்றுள்ளார்.
- ஆஸ்திரேலிய நாட்டின் தலைவர் ஆஸ்திரேலியாவின் இராணி (இங்கிலாந்து), பேரரசி இரண்டாம் எலிசபெத் ஆவார்.
- ஆஸ்திரேலிய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், அந்நாட்டின் நிர்வாக அதிகாரம் பேரரசியின் பிரதிநிதியான கவர்னர் ஜெனரலால் உபயோகிக்கப்படுகிறது.
- ஆஸ்திரேலியப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் பேரரசி கவர்னர் ஜெனரலை நியமிக்கிறார்.
- பிரதமர் அந்நாட்டு அரசாங்கத்தின் தலைவர் ஆவார்.

Post Views:
402