TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய மெரினோ செம்மறி ஆடுகள் - இமாச்சலப் பிரதேசம்

August 31 , 2026 13 days 134 0
  • கம்பளித் தரத்தை மேம்படுத்தவும், மாநிலத்தின் கம்பளி உற்பத்தியை அதிகரிக்கவும் ஆஸ்திரேலிய மெரினோ செம்மறி ஆடுகளை இமாச்சலப் பிரதேசம் அறிமுகப் படுத்தியது.
  • தேசிய வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஆஸ்திரேலியாவிலிருந்து 240 மெரினோ செம்மறி ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டு 2021 ஆம் ஆண்டில் ₹6 கோடி மதிப்பிலான இத்திட்டம் தொடங்கியது.
  • செயற்கை கருவூட்டல் மூலம் மெரினோ மற்றும் உள்நாட்டு காடி செம்மறி ஆடுகள் கலப்பினம் செய்யப்பட்டு, 800 ஆரோக்கியமான குட்டிகள் உருவாக்கப்பட்டன.
  • சிறந்த, ஆடை தரத்திலான கம்பளியை உற்பத்தி செய்வதற்காக கம்பளியின் தடிமனை சுமார் 27 மைக்ரான்களில் இருந்து 21-22 மைக்ரான்களாகக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இமாச்சலப் பிரதேசம் தனது ஆண்டு கம்பளி உற்பத்தியை சுமார் 1,500 டன்னில் இருந்து 2027 ஆம் ஆண்டிற்குள் 3,000 டன்னாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்