37வது சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சியான ஆஹார், டெல்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.
ஆஹார் என்பது இந்தியாவின் மிகப்பெரிய நான்கு நாட்கள் அளவிலான சமையல் சார்ந்த நிகழ்ச்சியாகும்.
மத்திய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சகம் மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த நிகழ்சசியானது ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விருந்தோம்பல் துறையின் திறனை வெளிப்படுத்துவதிலும், உள் நாட்டு மற்றும் சர்வதேச கொள்முதல் நிறுவனங்களுக்கு இந்தியாவின் தொழில் நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றி வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப் பட்டது.