- நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் மாநிலங்கள் கட்டாயம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவசியமில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.
- பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு அளிப்பது அடிப்படை உரிமை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- அரசியலமைப்பின் 16 (4) மற்றும் 16 (4-A) ஆகிய இரண்டு சரத்துகள் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கு ஆதரவாக நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு செய்ய அரசிற்கு அதிகாரம் அளிக்கின்றது.
- நீதிமன்றங்கள் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பின்னணி
- 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட உத்தரகாண்ட் அரசின் கொள்கை முடிவு தொடர்பான மனுக்களை விசாரிக்கும் போது உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
- பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் மாநிலத்தில் பொதுப் பணிகளில் உள்ள அனைத்து பதவிகளையும் நிரப்ப உத்தரகாண்ட் அரசு அறிவித்தது.
இந்திரா சவ்ஹானி (எதிர்) இந்திய அரசு மற்றும் எம். நாகராஜ் வழக்கு (1992):
- இந்திய உச்ச நீதிமன்றமானது சரத்து16 (4)ன் கீழ் இடஒதுக்கீடானது ஒருவர் அரசாங்கப் பணியில் சேரும் போது மட்டுமே வழங்க முடியும் என்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.