இடைநிலை அணுசக்திப் படைகள் ஒப்பந்தம் - ரஷ்யா தற்காலிக ரத்து
February 6 , 2019 2388 days 760 0
பனிப்போர் காலத்திய இடைநிலை அணுசக்திப் படைகள் ஒப்பந்தத்தில் (Nuclear Forces Treaty) (1987) தனது ஈடுபாட்டை ரஷ்யா தற்காலிமாக ரத்து செய்திருக்கின்றது. இது இதே போன்ற ஒரு முடிவை அமெரிக்கா எடுத்ததற்குப் பிறகு ரஷ்யா இம்முடிவை எடுத்திருக்கின்றது.
இந்த ஒப்பந்தம் 500 கிலோ மீட்டர் முதல் 5500 கிலோ மீட்டர் வரம்பிற்குட்பட்ட, நிலத்திலிருந்து ஏவப்படும் அணுசக்தி ஏவுகணைகளை வைத்திருக்கவோ, தயாரிக்கவோ அல்லது சோதனை செய்யவோ ரஷ்யாவையும் அமெரிக்காவையும் தடுக்கின்றது.
ரஷ்யாவின் புதிய கடற்படை ஏவுகணை நோவாடார் 9M729 இந்த ஒப்பந்தத்தை மீறியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகின்றது. மேலும் இவ்வொப்பந்தத்திலிருந்து விலகுவதற்காக 6 மாதம் அறிவிப்பு காலத்தையும் தந்தது.