இடைநிலை அணு ஆயுத (INF – Intermediate Range Nuclear Forces) ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முடிவு
October 25 , 2018 2639 days 909 0
பனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்ட 30 வருட காலமாக நடைமுறையில் உள்ள இடைநிலை அணு ஆயுத (INF) ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக ஒருதலைபட்சமாக அமெரிக்க அதிபர் தெவித்துள்ளார்.
500-5000 கி.மீ. தொலைவுக்குப் பாயும் குறுகிய மற்றும் நடுத்தர தூர அணுசக்தி ஏவுகணைகளை உருவாக்குதல், சோதனை செய்தல், வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றைத் தடை செய்யும் இது பனிப்போர் காலத்தின் முக்கியமான ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தமானது 1987 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் USSR அதிபர் மைக்கேல் கார்பச்சேவ் ஆகியோருக்கிடையே கையெழுத்தானதாகும்.