சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது மின்னணுக் கழிவுகளை கையாளுவதற்குப் பயன்படுத்தப்படும் வகையில் e-source (மின்னணு வளம்) எனப்படும் இணையத் தளம் ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
முறையான மற்றும் முறைசாரா நாடுகளின் பங்குதாரர்களை இணைப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளைக் கையாளுவதற்கு ‘e-source’ தளம் பயன்படுத்தப்படும்.
மின்சாரம் மற்றும் மின்னணு உபகரணக் கழிவுகளுக்கான இணையச் சந்தையாக செயல்படுவதற்கான ஒரு பரிமாற்றத் தளமாக ‘e-source’ தளம் செயல்படும்.
இந்திய – ஜெர்மானிய நீடித்த வளர்ச்சி மையமானது (Indo-German Centre on Sustainability) இந்த முன்னெடுப்பிற்குத் தலைமை தாங்குகிறது.