TNPSC Thervupettagam

இணையதள விளையாட்டுகளுக்கு GST விதிப்பு – ஆய்வுக் குழு

May 31 , 2021 1448 days 572 0
  • இணையதள விளையாட்டுகளின் மீது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பதற்காக வேண்டி அவற்றின் சேவை மதிப்பீட்டினை ஆய்வு செய்வதற்காக துணைநிலை அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை இந்திய அரசு அமைத்துள்ளது.
  • கேளிக்கை விளையாட்டு மற்றும் பந்தய விளையாட்டுத் தளங்கள் வழங்கும் சேவையைப் பற்றியும் இக்குழு ஆய்வு செய்யும்.
  • இந்தியாவில் இணையதள விளையாட்டுகள் அதன் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன என்பதால் வரிவிதிப்பு மற்றும் மதிப்பீடு போன்றவை தொடர்பான சிக்கல்களுக்கு இது வழிவகுக்க இருக்கிறது.
  • எனவே, இந்த நிறுவனங்களின் சேவை மதிப்பீடு சார்ந்த நிச்சயமற்ற தன்மையைப் புரிந்து, ஆய்வு செய்து அதற்கான தீர்வினை உருவாக்குவதற்காக இந்தக் குழுவானது அமைக்கப் பட்டுள்ளது.
  • மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய நிதி அமைச்சர் தலைமையிலான சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திடம் இக்குழுவானது ஆறு மாதத்தில் தமது அறிக்கையினைச் சமர்ப்பிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்