இணையவழிப் பாதுகாப்பு பல்முனை நன்கொடையாளர் அறக்கட்டளை நிதி
August 23 , 2021 1588 days 745 0
உலக வங்கியானது பரவலான டிஜிட்டல் மேம்பாட்டுக் கூட்டிணைவு எனும் ஒரு தலைமைத்துவத் திட்டத்தின் கீழ் புதிய இணையவழிப் பாதுகாப்புப் பல்முனை நன்கொடையாளர் அறக்கட்டளை நிதி (Cybersecurity Multi-Donor Trust Fund) என்ற ஒன்றைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தப் புதிய நிதியானது இணையப் பாதுகாப்பு மேம்பாட்டுச் செயல்பாட்டு நிரல்களை சிறப்பாக வரையறுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக வங்கிகளின் திட்டங்கள் மற்றும் நிதி வழங்கலில் இணையப் பாதுகாப்பு கருதுகோள்களின் கணிசமான விளைவுகளின் பிரதிபலிப்பை உறுதி செய்ய இது உதவுகிறது.
எஸ்தோனியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நன்கொடையாளர்களின் பங்களிப்புகளானது இந்த அறக்கட்டளை நிதியை தொடங்க வழி வகுத்தது.