TNPSC Thervupettagam

இணைய வழியில் தொழிலாளர்கள் மசோதா 2025 – ஜார்க்கண்ட்

December 22 , 2025 3 days 27 0
  • ஜார்க்கண்ட் தள அடிப்படையிலான இணைய வழித் தொழிலாளர்கள் (பதிவு மற்றும் நலன்புரி) மசோதா, 2025 ஆனது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சட்டம் ஆனது இணையம் மற்றும் இணைய தளம் அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது.
  • இது டிஜிட்டல் தளங்கள் மற்றும் விநியோகம், போக்குவரத்து மற்றும் தேவைக்கேற்ப வழங்கப்படும் சேவைகள் போன்ற துறைகளில் சேவை திரட்டு நிறுவனங்கள் மூலம் ஈடுபடும் தொழிலாளர்களுக்குப் பொருந்தும்.
  • தொழிலாளர்களைப் பதிவு செய்யவும், அடையாள அட்டைகளை வழங்கவும், நலத் திட்டங்களை மேற்பார்வையிடவும் ஒரு இணையவழித் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப் படும்.
  • இந்தச் சட்டம் குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகளை கட்டாயமாக்குகிறது என்பதோடு மேலும் அதன் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்