இணைய வெளி நடவடிக்கைகள் படைப் பிரிவு மற்றும் உதவிப் பிரிவுகள்
May 7 , 2023 820 days 340 0
இராணுவத் தளபதிகள் மாநாடு (ACC) ஆனது, இணைய வெளி நடவடிக்கைகள் படைப் பிரிவு மற்றும் உதவிப் பிரிவுகளை (CCOSWs) விரைவில் செயல்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
நமது எதிரி நாடுகளின் இணையவெளி போர்த் திறன்களின் விரிவாக்கமானது இணைய வெளியினை முன்பை விட அதிக போட்டித் தன்மை மிக்கதாகவும், பெரும் போட்டியாளர்கள் நிறைந்ததாகவும் மாற்றியுள்ளது.
இராணுவத்தின் இணையப் பாதுகாப்பு நிலைப்பாட்டினை வலுப்படுத்த செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட சில கட்டாய இணையவெளிப் பாதுகாப்புச் செயல்பாடுகளை மேற் கொள்வதற்குப் பல்வேறு அமைப்புகளுக்கு இந்தப் பிரிவுகள் உதவும்.