TNPSC Thervupettagam

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை வகைப்படுத்தும் குழு - டெல்லி உயர்நீதி மன்றத்தின் முதல் தலைமை பெண் நீதிபதி தலைமை

October 3 , 2017 2944 days 1231 0
  • இந்தியாவின் குடியரசுத் தலைவர் அக்டோபர் 2-ம் தேதியன்று, அரசியலமைப்பு விதி 340-ல் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்தும் பொருட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை (Other Backward Classes) ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை அமைத்தார்.
  • இந்த ஆணையத்தை அமைக்கும் முடிவு, ஆகஸ்ட் 23-ம் தேதி அமைச்சரவை குழுவினால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) என்ற பரந்த பிரிவுக்குள் சேர்க்கப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களிடையே ஒழுங்கற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் பலன்களை ஆய்வு செய்வது என்ற முடிவினைத் தொடர்ந்தாகும்.
  • தற்சமயம் உட்பிரிவிற்குள் வகைப்படுத்துதல் என்பது கிடையாது. 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது பிரிக்கப்படாத ஒரே பொருளாகும்.
  • உட்பிரிவை வகைப்படுத்துதல் மூலம் இதர பின்தங்கிய வகுப்பினரில் உள்ள மிகவும் பின்தங்கிய வகுப்பினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளுக்காக இட ஒதுக்கீட்டின் பலன்களை அடைவது உறுதி செய்யப்படும்.
  • இந்தக் குழுவில் உள்ளடங்கியோர்:
தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி G. ரோகிணி
உறுப்பினர் டாக்டர் J.K. பஜாஜ்
உறுப்பினர் (பதவி வழி) இந்திய மானுடவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்
உறுப்பினர் (பதவி வழி) இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பொது தாளாளர்
ஆணையத்தின் செயலாளர் கூடுதல் செயலாளர், சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை - சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
  • ஆணையத்திற்கு தலைவரை நியமித்ததிலிருந்து 12 வார கால அளவிற்குள் இந்த ஆணையம் இந்திய குடியரசுத் தலைவருக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்