இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பமான ஐந்தாண்டுகள்: 2014 – 19
September 25 , 2019 2122 days 870 0
உலக வானிலை அமைப்பால் (World Meteorological Organization - WMO) தொகுக்கப்பட்ட ஒரு புதிய ஐ.நா. அறிக்கையின்படி, 2019 உடன் முடிவடையும் கடந்த ஐந்தாண்டுக் காலமானது இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பமான காலமாக மாறி இருக்கின்றது.
இந்தக் காலமானது தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய (1850-1900) கால கட்டத்தில் இருந்த வெப்பநிலையை விட 1.1 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை கொண்டதாகவும் 2011-2015 ஆம் ஆண்டுகளின் வெப்பநிலையை விட 0.2 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை கொண்டதாகவும் இருக்கும் என்று தற்போது மதிப்பிடப் பட்டுள்ளது.
1850 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகள் ஏற்கனவே வெப்பமானவையாக இருந்தன.
கார்பன் டை ஆக்சைடின் அளவானது 37 பில்லியன் டன்கள் என்ற மிக அதிக அளவை எட்டியுள்ளது.