வடக்கு இத்தாலியில் உள்ள குரோட்டா டெல்லா பாசுரா குகையில் கண்டறியப்பட்ட 14,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் மற்றும் கைரேகைகளை அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
இந்தத் தடயங்கள் இரண்டு பெரியவர்கள், ஒரு வளரிளம் பருவத்தினர் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட எபிக்ராவெட்டியன் காலத்தைச் சேர்ந்த ஐந்து வேட்டைக் காரர்கள்-உணவு சேகரிப்பவர்களுக்குச் சொந்தமானவை.
குகையின் தரையில் சுமார் 180 கால்தடங்கள் மற்றும் கைரேகைகள் கண்டுபிடிக்கப் பட்டன.
மனிதர்கள் குறுகிய குகைப் பாதைகள் வழியாக ஊர்ந்து சென்றதற்கான முதல் புதைபடிவ சான்றுகளை இந்தக் கண்டுபிடிப்புகள் வழங்குகின்றன.
இந்தக் குழு குகைக்குள் வெளிச்சத்திற்காக ஸ்காட்ஸ் பைன் மரக்கிளைகளால் ஆன தீப்பந்தங்களைப் பயன்படுத்தியது.