இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவன தினம் - பிப்ரவரி 01
February 2 , 2022 1341 days 599 0
இந்தியக் கடலோரக் காவல்படை ஆனது, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 அன்று தனது 46வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
இந்தியக் கடலோரக் காவல்படையானது, உலகின் நான்காவது பெரிய கடலோரக் காவல் படையாக, இந்தியக் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதிலும், இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் விதிமுறைகளைச் செயல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்கப் பங்கினை ஆற்றியுள்ளது.
இந்தியக் கடலோரக் காவல்படையானது 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் 1978 ஆம் ஆண்டு கடலோரக் காவல்படைச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.