TNPSC Thervupettagam

இந்தியக் கப்பற் படையின் அபிஹிதயா மையம்

March 27 , 2019 2322 days 690 0
  • இந்தியக் கடற்படையின் அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பயிற்சி வசதியானது (NBCTF - Nuclear, Biological and Chemical Training Facility) லோனவாலாவில் உள்ள ஐஎன்எஸ் சிவாஜியில் திறந்து வைக்கப்பட்டது.
  • NBCTF ஆனது அபிஹிதயா என்று சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அபிஹிதயா என்பது “ஊடுருவ இயலாத” என்ற பொருளைக் குறிக்கும்.
  • இது அணு ஆயுத, உயிரியல் மற்றும் வேதியியல் பொருட்களுக்கு எதிரான பாதுகாப்பு, அவற்றைக் கண்டறிதல் மற்றும் அவற்றைச் செயலிழக்கச் செய்தல் ஆகியவை குறித்து கடற்படைப் பணியாளர்களுக்கு நிகழ்நேரப் பயிற்சியை வழங்கவிருக்கிறது.
ஐ.என்.எஸ் சிவாஜி
  • ஐஎன்எஸ் சிவாஜி என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் லோனவாலாவில் அமைந்துள்ள இந்திய கடற்படை நிலையமாகும்.
  • இது கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவற் படையின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கான கடற்படை பொறியியல் கல்லூரியைக் கொண்டுள்ளது.
  • இது 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி எச்எம்ஐஎஸ் சிவாஜியாக இணைக்கப்பட்டது.
  • ஐஎன்எஸ் சிவாஜியானது 2019-20 அன்று “1945 ஆம் ஆண்டு முதல் இந்தியக் கடற்படையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது” என்ற கருத்துருவுடன் பிளாட்டின நினைவு வருடத்தை அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்