இந்தியக் காசநோய் அறிக்கை 2022
March 27 , 2022
1240 days
1481
- 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் பதிவான காசநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை என்பது கடந்த ஆண்டை விட 19% உயர்ந்துள்ளது.
- 2022 ஆம் ஆண்டு இந்தியக் காசநோய் அறிக்கையில் இந்த தகவலானது தெரிவிக்கப் பட்டுள்ளது.
- 2021 ஆம் ஆண்டில் பதிவான மொத்தக் காசநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை என்பது 19,33,381 ஆகும்.
- 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 16,28,161 ஆக இருந்தது.
- இந்தியாவில் 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் அனைத்து வகையான காசநோய் பாதிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்பு வீதமானது 11% உயர்ந்துள்ளது.
- காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 61% நபர்கள் ஆண்கள் மற்றும் 39 சதவீதத்தினர் பெண்கள் ஆவர்.
- குறிப்பிடப்பட்ட நோயாளிகள் 6% பேர் குழந்தைகளாவர்.
- டெல்லியில் அதிக காசநோய் பதிவாகியுள்ளது.
- குஜராத்தில் மிகக் குறைவாகவே காசநோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளது.
Post Views:
1481