காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் உள்ள பெரிய ஒற்றைக் கொம்பு அல்லது இந்தியக் காண்டாமிருகங்களின் எண்ணிக்கையானது நான்கு ஆண்டுகளில் 200 வரை அதிகரித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட காண்டாமிருகக் கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கையானது 2,413 ஆக இருந்தது.
இந்தியக் காண்டாமிருகம் ஆனது பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மற்றும் பெரிய இந்தியக் காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது இந்தியத் துணைக்கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட காண்டாமிருகம் ஆகும்.
இது சர்வதேச இயற்கை வளங்காப்பு அமைப்பின் சிவப்புப் பட்டியலில் பாதிக்கப்படக் கூடிய இனம் என்றும், 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தில் முதலாவது அட்டவணையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.