TNPSC Thervupettagam

இந்தியக் காற்றாலை ஆற்றல் சந்தை கண்ணோட்ட அறிக்கை

June 13 , 2021 1496 days 598 0
  • இந்த அறிக்கையானது உலகளாவிய காற்று ஆற்றல் மன்றத்தினால் வெளியிடப் படுகிறது.
  • இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அளவிலான சந்தைகளில் 10.3 ஜிகாவாட் அளவிலான திட்டங்கள் நடப்பில் செயல்படுத்தப்படுவதாக இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
  • இது காற்றாலை ஆற்றல் திட்டங்களை நிறுவும் நடவடிக்கைகளை 2023 ஆம் ஆண்டு வரை கொண்டு செல்லும்.
  • 2021-25 ஆம் ஆண்டுகளுக்குள் 20 GW திறன் கொண்ட காற்றாலை மின்னாற்றல் நிலையங்களை இந்திய நாடு நிறுவும் என இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் இந்தியாவில் ஒட்டு மொத்த நிறுவப் பட்ட காற்றாலை உற்பத்தித் திறன் 38 ஜிகா வாட் ஆகும்.
  • உலகளவில் இந்தியா நான்காவது மிக அதிக அளவிலான நிறுவப் பட்ட காற்றாலை உற்பத்தித் திறனைக் கொண்டு இருக்கின்றது.
  • ஐரோப்பிய ஒன்றியம் 48 ஜிகாவாட் என்ற நிறுவப் பட்ட உற்பத்தித் திறனைக் கொண்டு காற்றாலை மின்சாரத்தில் முன்னணிச் சந்தையாக இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்